"அண்ணாமலை மீது நடவடிக்கை"-மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பறந்த கடிதம்

x

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் நண்பர்களிடமிருந்து மாதத்திற்கு 7 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரை பெற்று குடும்ப செலவுகளுக்கு பயன்படுத்துவதாக கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக அவர் 1 கோடியே 76 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளதாக தெரிகிறது என்றும் எம்.பி கலாநிதி வீராசாமி குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை தன் கையில் அணிந்திருக்கும் ரபேல் கடிகாரத்தை ரூபாய் 3 லட்சம் பணமாக கொடுத்து சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து வாங்கியதாக கூறியதையும் குறிப்பிட்டுள்ள அவர், வருமான வரிச் சட்டத்தின் கீழ் ரூபாய் 20 ஆயிரத்துக்கு மேல் பணமாக கொடுப்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்துள்ளார். இதனால் அண்ணாமலை மீது வருமான வரி சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்