"முதுகில் குத்திய மேற்கத்திய நாடுகள்"... "ரஷ்யாவை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது" - ஆவேசமாக பேசிய ரஷ்ய அதிபர்

x
  • உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு ஆகவிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் அதிபர் புதின் உரையாற்றினார்.
  • அப்போது உக்ரைன் போரை தவிர்க்கவே முயற்சித்தோம் என்ற புதின், மேற்கத்திய நாடுகள் முதுகில் குத்தியதால், அமைதியாக தீர்வு காண முடியாத சூழலில் போர் ஏற்பட்டதாகவும், இந்த போர் ரஷ்யா இருத்தலுக்கானது எனவும் குறிப்பிட்டார்.
  • போரில் ரஷ்யா முன்னேறி வருவதாகவும், உக்ரைனின் 5-ல் ஒரு பகுதி ரஷ்யாவிடம் உள்ளதாகவும் குறிப்பிட்ட புதின், ரஷ்ய இயற்கை வளங்களை திருட மேற்கத்திய நாடுகள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
  • அமெரிக்கா தலைமையிலான நேட்டோவை கிழக்கை நோக்கி விரிவுபடுத்துவதற்கான காரணம் ஏதுமில்லை என குறிபிட்ட புதின், ரஷ்ய படைகளை நகர்த்தும் முயற்சியில் மேற்கத்திய நாடுகள் தோல்வியை தழுவியுள்ளன என தெரிவித்துள்ளார்.
  • ரஷ்யாவை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது எனவும் புதின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்