வேண்டுமா? வேண்டாமா? ட்விட்டரில் டிரம்பிற்காக எலோன் நடத்திய கருத்துக் கணிப்பு
முடக்கப்பட்டிருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.டொனால்ட் டிரம்ப், தனது டிவிட்டர் கணக்கு மூலம் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துகளை பதிவிடுகிறார் என்று எண்ணிய டிவிட்டர் நிறுவனம், அவரின் கணக்கை 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தடை செய்தது. இந்நிலையில், டிவிட்டர் தளத்தின் புதிய உரிமையாளராக பொறுப்பேற்ற எலோன் மஸ்க், டிரம்பின் டிவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்குவதாக அறிவித்து இருந்தார். இது குறித்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தினார். அதன் முடிவில் 51.8 சதவீத வாக்காளர்கள் தடையை நீக்க ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மக்களின் விருப்பம் நிறைவேறட்டும் என தெரிவித்த மஸ்க், டிரம்ப்பின் டிவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளார். அதன்படி, டிரம்பின் டுவிட்டர் கணக்கு 22 மாதத்திற்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கிய நிலையில், தனக்கென "ட்ரூட் சோசியல்ஸ்" என்ற தனி தளத்தை உறுவாக்கிக் கொண்ட டிரம்ப், தான் அதிலே இருக்க போவதாகவும், டிவிட்டருக்கு திரும்ப விருப்பமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.