தென்காசியில் பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் ட்விஸ்ட்... மீண்டும் வீடியோ வெளியிட்ட குருத்திகா - அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்கள்

x

தென்காசியில், காதல் திருமணம் செய்த நபரிடம் இருந்து பெண் கடத்தப்பட்ட சம்பவத்தில், தனது விருப்பபடியே தனது தந்தை அழைத்துச் சென்றதாக குருத்திகாக மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வினித்தை காதல் திருமணம் செய்த குருத்திகாவை, பெண் வீட்டார் வினித்தின் வீட்டிலிருந்து கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட குருத்திகா, தன்னை யாரும் கடத்தவில்லை என தெரிவித்தார். இந்த நிலையில் மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள குருத்திகா, வினித், பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததால், தனது விருப்பப்படியே அவரை விட்டு விலகி வந்ததாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்