திரையுலகில் 20 ஆண்டுகளை கடந்த திரிஷா
சினிமாவில் கதாநாயகியாக நீடிப்பது என்பதே மிகப்பெரிய சவால்...
அதிலும், தசாப்தங்கள் கடந்து முன்னணியில் இருப்பது என்பது அரிதிலும் அரிது....
அப்படி தமிழ் சினிமாவில் இரண்டு தசாப்தங்களாக முன்னணி நாயகியாக வலம் வருபவர் திரிஷா...
ஆக சினிமாவில் அறிமுகமானவர், ஜோடி படத்தில் அடையாளமே தெரியாத வேடத்தில் நடித்தார்.
பின்னர் அமீரின் மவுனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியானார் திரிஷா... மவுனம் பேசியதே வெளியான தினம் இன்று. தமிழ்நாட்டில் திரிஷா அலை வீசத்தொடங்கிய தினமும் இன்று...
இதன்பிறகு சாமி, கில்லி என டாப் கியரில் பயணித்தார் திரிஷா...
விஜயுடன் இணைந்தாலே மேஜிக் என பேசும் அளவிற்கு இருவரது கூட்டணி ரசிகர்களுக்கு ஸ்பெஷல்...
கமர்ஷியல் படங்கள் ஒருபக்கம் என்றால், லேசா லேசா திரிஷா, சம்திங் சம்திங் திரிஷா, அபியும் நானும் திரிஷா என படத்திற்கு படம் தன்னை நேசிப்போர் கூட்டத்தை அதிகரித்துக்கொண்டார்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் ஜெஸ்ஸியாக இளைஞர்களை ஆட்கொண்டார்... தமிழ் சினிமாவில் உச்ச இடத்தை அடைந்தார்.
மீண்டும் கவுதம் மேனனின் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் இணைந்து ரசிகர்களை கிறங்கடித்தார் திரிஷா.
தொடர்ச்சியாக தோல்வி, மார்க்கெட் அவுட்... அவ்வளவுதான் திரிஷா என எழுதிக்கொண்டிருந்த சமயம்... அப்போது ஜானுவாக கூலாக என்ட்ரீ கொடுத்து புயலாக சுழன்றிடித்தார்.
எல்லோருக்கும் ஒரு பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கும்.... திரிஷாவிற்கு அப்படியொரு பாக்கியத்தை கொடுத்து அழகுபார்த்தார் மணிரத்னம்... இந்த நிமிடமும் இளவரசி குந்தவையை நினைத்து மகிழ்வோர் பலர்...
அறிமுகமான சில ஆண்டுகளிலேயே உச்ச இடத்தை தொட்டவர், இன்று வரை அதனை தக்கவைத்து திரிஷா திரிஷா திரிஷா என கொண்டாட வைப்பதுதான் அவரது 20 ஆண்டு திரையுலக பயணம் சொல்லும் சேதி....