TRB-யின் அதிரடி அறிவிப்பு..! இவளோ மதிப்பெண் இருந்தால் தான்..!

x

விரிவுரையாளர் பணியில் வெளிமாநிலத்தவர்கள் சேர்வதைத் தடுக்கும் வகையில், தமிழ்ப் பாடத்தில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற வேண்டும் என்று புதிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசுப் பணிகளில் வெளிமாநில பட்டதாரிகள் சேர்வதை தடுக்கும் வகையில், தமிழை கட்டாயத் தகுதித் தேர்வாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. அதுபோலவே, ஆசிரியர் தேர்வு வாரியமும் தமிழை கட்டாயத் தேர்வாக அறிமுகம் செய்துள்ளது. அதனடிப்படையில், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களில், முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் ஆகிய நிலைகளில் 155 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், தமிழப் பாடத்தில் 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தேர்வில், 20 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பிரதான விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மாற்றுதிறனாளிகளுக்கு, கட்டாய தமிழ் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்