காய்கறி வியாபாரத்தில் களம் இறங்கி அசத்தும் திருநங்கை | Transgender | Thanjavur | ThanthiTV

x

தஞ்சாவூர் மாவட்டம் வடக்குவாசல் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை சத்யா. சொந்த காலில் நின்று உழைத்து முன்னேற வேண்டும் என்ற வைராக்கியத்துடன், தஞ்சாவூர் காமராஜ் சந்தையில் தனக்கும் ஒரு கடை ஒதுக்கி தன் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என தொடர்ந்து மாநகராட்சி மேயர் ராமநாதன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தைப் பகுதியில் திருநங்கை சத்யாவிற்கு மாநகராட்சி சார்பில் ஒரு கடை ஒதுக்கப்பட்டுள்ளது. அதை இன்று மாநகராட்சி மேயர் ராமநாதன் தொடங்கி வைத்தார். அத்துடன் தானே விற்பனையாளராக மாறிய மேயர் சம்மணம் போட்டு அமர்ந்து, காய்கறிகளை எடை போட்டு விற்க தொடங்கினார். விற்பனை செய்த காய்கறிகளுக்கு பணம் வாங்கிய மேயர்ராமநாதன், கண்களில் ஒத்திக் கொண்டு கல்லாவில் வைத்தார். பொதுமக்கள் ஏராளமான காய்கறிகளை வாங்கி சென்றனர். வியாபாரத்தைத் தொடர்ந்த திருநங்கை சத்யா இது குறித்து நமது தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தனக்கு உதவிய முதல்வர் ஸ்டாலின், தஞ்சை மேயர், மற்றும் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்