திருமணம் செய்தவர் விட்டு சென்றதால் திருநங்கை செய்த பகீர் காரியம் - தேனியில் அதிர்ச்சி
திருச்சியை சேர்ந்த பிரின்சி என்ற திருநங்கை கம்பத்தில் குடியேறியுள்ளார். அப்போது அறிவு என்ற இளைஞருக்கும் பிரின்சிக்கும் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து அறிவின் வீட்டில் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு, பிரின்சியை சந்திப்பதை அறிவு தவிர்த்தாக தெரிகிறது. இதனையடுத்து அறிவை தன்னோடு சேர்த்து வைக்கும்படி போலீசாரிடம் புகாரளித்திருந்த பிரின்சி, திடீரென பெட்ரோல் கேனுடன் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், அறிவிடம் விசாரணை நடத்தப்படும் எனவும், புகார் உறுதியானால் இருவரையும் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இதனையடுத்து கீழே இறங்கிய பிரின்சி, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்,