பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆட்சியர்..வழிமறித்து பணம் பறித்த மர்ம நபர்கள்..2 தனிப்படைகள் அமைத்து வலைவீச்சு
ஈரோடு ஆட்சியராக பணியாற்றி வந்த கிருஷ்ணனுண்ணி, தற்போது சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்படுள்ளார். இதையடுத்து கலெக்டர் பங்களாவில் இருந்த பொருட்களை மினி லாரியில் ஏற்றி தனது சொந்த ஊரான கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டிற்கு இடமாற்றம் செய்துள்ளார். அப்போது பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் கஞ்சி கோணம்பாளையம் பகுதியில் சென்ற போது பைக்கில் வந்த 3 பேர், வழிமறித்தனர். ஓட்டுநரைக் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story