மூச்சுக்கு போராடிய குழந்தைக்கு தாய் கொடுத்த தண்ணீர் எமனாக மாறிய சோகம் - கண் முன்னே துடிதுடித்து பலியான குழந்தை

x

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையின் போது, தண்ணீர் என நினைத்து தவறுதலாக ஸ்பிரிட் குடித்த 8 சிறுமி குழந்தை உயிரிழந்தது.

அரியலூரை சேர்ந்த ஆனந்த குமார் என்பவரின் 8 வயது மகள், சிறுநீரக செயல்பாட்டு குறைவு காரணமாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறுமிக்கு டயாலிசிஸ் செய்யப்பட்ட பின்னர், தண்ணீர் கேட்ட நிலையில், அருகிலிருந்த அவரது தாய் தீபா, படுக்கைக்கு கீழே பாட்டிலில் இருந்ததை, தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட்டை எடுத்து கொடுத்துள்ளார். அதனைக் குடித்த சிறுமி, பரிதாபமாக உயிரிழந்தார். டயாலிசிஸ் வார்டில் அலட்சியமாக ஸ்பிரிட்டை வைத்திருந்ததும், மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததும் குழந்தை இறப்புக்கு காரணம் என தாய் கண்ணீருடன் தெரிவித்தார். குழந்தையின் இறப்பு குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், உடற்கூராய்வு அறிக்கை வந்த பின்னரே இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்