குழந்தைக்கு நேர்ந்த சோகம் - ஸ்விட்ச் பாக்ஸில் கையை வைத்து உயிரை விட்ட தந்தை
அரியலூர் அருகே 2 வயது குழந்தை கட்டிலில் இருந்து விழுந்து உயிரிழந்த சோகத்தில், தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே ஏலாக்குறிச்சியை சேர்ந்தவர் தினேஷ். இவரது 2 வயது குழந்தையான விக்னேஷ், கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த வேதனைக்குள்ளான தினேஷ், காப்பர் ஒயரை கையில் சுற்றிக்கொண்டு, ஸ்விட்ச் பாக்ஸில் கையை விட்டுள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story