சுற்றுலா பேருந்து பயங்கர விபத்து - ஓட்டுநர் மீது கொலை வழக்கு பதிவு
பாலக்காடு வடகாஞ்சேரி பேருந்து விபத்திற்கு காரணமாக ஓட்டுனர் மீது தன்னிச்சையான ஆணவ கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா பேருந்து அதிவேகமாக சென்றதே விபத்திற்கு காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய சுற்றுலா பேருந்து ஓட்டுநர் ஜோமன் பட்ரோஸ், ஆசிரியர் எனக்கூறி சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
தப்பிச்சென்ற ஜோமன் பட்ரோஸையும் அவருக்கு உதவிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் கவனக்குறைவாகவும் வேகமாகவும் வாகனம் ஓட்டிய ஜோமன் பட்ரோஸ் மீது தன்னிச்சையான ஆணவ கொலை வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விபத்துக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.