ஈரோட்டில் மீண்டும் உயர்ந்த தக்காளி விலை..
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தாளவாடி மலைப் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் தக்காளியை விவசாயிகளிடமிருந்து மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்புகின்றனர். தாளவாடி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்துள்ளது. தேவை அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ தக்காளியை 23 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். இதன் காரணமாக தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூபாய் 35 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
Next Story