இன்றைய தலைப்பு செய்திகள் (25-07-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

இந்தியா கூட்டணி - பிரதமர் விமர்சனம்

பெயரில் இந்தியாவை சேர்ப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது....

திசையற்ற எதிர்க்கட்சிகளை இதுவரை கண்டதே இல்லை எனவும் பிரதமர் மோடி இன்று விமர்சனம்...

நீங்கள் எங்களை எப்படி அழைத்தாலும் நாங்கள் தான் இந்தியா என ராகுல்காந்தி கருத்து...

இந்தியா என்ற பெயர் வைத்துக் கொள்வதால் மட்டுமே, எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது என எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையான விமர்சித்துள்ளார். இதனிடையே, மணிப்பூர் விவகாரத்தில் இன்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அண்மைத் தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் ரமேஷ் குமார்...

நம்பிக்கையில்லா தீர்மானம் - எதிர்க்கட்சிகள் திட்டம்

அமளிக்கு மத்தியில் 2 மசோதாக்கள் நிறைவேற்றம்

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு முடிவு

ரமேஷ்குமார், மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன? நாடாளுமன்ற முடக்கத்தை மத்திய அரசு எப்படி எதிர்க்கொள்ள உள்ளது? விவரங்களை சொல்லுங்க..

மணிப்பூரில் பிராட்பேண்ட் இணைய சேவை தொடக்கம்

இந்தியா கூட்டணி தலைவர்கள் மணிப்பூர் செல்ல திட்டம்

மணிப்பூர் செல்ல கமல்ஹாசனுக்கு தடை

வன்முறை பாதித்த மணிப்பூரில் பல மாதங்களுக்கு பிறகு பிராட்பேண்ட் இணைய சேவைகளுக்கான தடையை அரசு இன்று நீக்கியுள்ளது. இதனிடையே, எதிர்க்கட்சி தலைவர்கள் குழு இந்த வார இறுதியில் மணிப்பூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. செய்தியாளர் ராஜா வழங்கிய தகவல்கள் இவை..

செந்தில்பாலாஜியின் ஆட்கொணர்வு மனு முடித்து வைப்பு

உச்சநீதிமன்றமே முடிவு எடுக்கட்டும் - நீதிபதிகள்

"சிறையில் எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை"

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று முடித்து வைத்தது. மேலும், அமலாக்கத்துறை காவல் தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய வாதங்கள் குறித்து விவரிக்கிறார் செய்தியாளர் சுரேஷ்...

5வது சுற்று வட்டப்பாதையில் சந்திரயான்-3

5வது சுற்று வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான் -3 வெற்றிகரமாக புவியை சுற்றிவர தொடங்கியது...

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 9 பேர் கைது

மீனவர்களை மீட்க கோரி முதல்வர் கடிதம்

ஆக.18 - மீனவ மாநாட்டில் முதல்வர் பங்கேற்பு?

ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதனையடுத்து, மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மீனவர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம்... விவரங்களுடன் இணைகிறார் செய்தியாளர் விஸ்வநாதன்...


Next Story

மேலும் செய்திகள்