இன்றைய தலைப்பு செய்திகள் (09-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines
2023ம் ஆண்டின் முதல் தமிழக சடடப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது...
ஆளுநர் ஆர்.என்.ரவி உரை...
நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கும் வகையிலும், கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளதாக ஆளுநர் உரை...
நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளதாகவும் பேச்சு
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதி...
முல்லை பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்த அரசு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆளுநர் பேச்சு...
திராவிட மாடல் ஆட்சி என்ற வாக்கியத்தை தவிர்த்து
சட்டப்பேரவையில் உரையாற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி...
2 மற்றும் 3 ஆம் பக்கங்களில் இருந்த திராவிட மாடல் என்ற வாக்கியங்களையும் தவிர்த்தார்
சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்ற வாக்கியத்தையும் தவிர்த்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி...
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அண்ணா அடங்கிய வரிகளையும் தவிர்த்ததால் பேரவையில் பரபரப்பு...
சட்டப்பேரவையில் அச்சிடப்பட்டதை மீறி ஆளுநர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...
அச்சிடப்பட்டதற்கு மாறாக ஆளுநர் பேசிய வார்த்தைகள் அவை குறிப்பில் இடம்பெறாது என்றும் பேச்சு....
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது பாதியில் வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி...
அரசின் கொள்கை குறிப்பை, ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தம் அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...