இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (08-07-2023)
- மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடக்கம்...அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தல்...
- கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயலாக்கம் தொடர்பாக ஜூலை மூன்றாவது வாரத்தில் சிறப்பு முகாம்...சென்னை மாநகராட்சி பகுதிகளில் விரிவான ஏற்பாடுகள்...
- மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் வெளியானது...ஆதார் எண், பெயர், குடும்ப அட்டை எண், தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்கள் கேட்பு...
- மகளிர் உரிமைத்தொகை கிடைப்பது சந்தேகம் என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி...நகைக்கத்தக்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்...
- தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்...சிறப்பு திட்ட செயலாக்க துறை, நில நிர்வாகம், வருவாய், சமூக நல ஆணையர் உள்ளிட்ட 13 பணியிடங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்...
- மின்மாற்றிகள் கொள்முதலில், அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒரே விலைப்புள்ளியை குறிப்பிட்டுள்ளதால் முறைகேடு நடந்ததாக புகார்...ஒப்பந்த விலைப்புள்ளிகள் அனைத்தும் கணினி மூலமாகவே பெறப்படுகின்றன என, மின்வாரியம் விளக்கம்...
Next Story