Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2023) | Morning Headlines | Thanthi TV

x

குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, சென்னை சூப்பர் கிங்ஸ்...ஐ.பி.எல் வரலாற்றில் 10வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து சாதனை.....

சென்னை அணி வெற்றியை தொடர்ந்து, சேப்பாக்கம் மைதானம் திருவிழாக் கோலம் பூண்டது...நள்ளிரவில் பட்டாசுகளை வெடித்து கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்...

சென்னை அணியின் ஆட்டம் சூப்பர் என அமைச்சர் துரைமுருகன் பாராட்டு...தோனி விரைவாக ஆட்டம் இழந்தது ஏமாற்றம் அளித்தாக ரசிகர்கள் கருத்து...

ஓய்வு பற்றி முடிவு எடுப்பதற்கு இன்னும் 9 மாத காலம் இருப்பதாக தோனி பேட்டி...சென்னை அணியுடன் எப்போதும் இருப்பேன் எனவும் உறுதி...

நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு...பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு...

குழந்தை திருமண விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் ஆனந்த் சந்திப்பு...சிதம்பரம் தீட்சிதர்களை சந்திப்பதாகவும் தகவல்...

அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...முதலீட்டாளர்களை சந்தித்து உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க உள்ளார்...

கோடை காலம் என்பதால் முதல்வர் ஸ்டாலின் சுற்றுலா சென்றிருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்...முதல்வரின் துபாய் பயணத்தால் எத்தனை தொழில் துவங்கப்பட்டது? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது எனவும் கேள்வி...

சென்னை மெரினா கடற்கரையில் பேனா சின்னம் அமைப்பதற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு...முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரை தொடர்ந்து மதுரையை சேர்ந்தவர் மனு தாக்கல் செய்துள்ளார்...

ஜூன் மாதம் பள்ளி திறப்பில் மாற்றம் இருந்தால் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார்....பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு...

ஐ.ஏ.எஸ் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வில், சென்னையை சேர்ந்த மாணவி ஜீஜீ, 107ஆவது இடத்தை பிடித்து சாதனை...முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று அபாரம்...

ஊட்டி மலர் கண்காட்சி, மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு...நேற்றுடன் நிறைவடைவதாக அறிவித்திருந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகையால் புதிய அறிவிப்பு...

ஊட்டியில் தொடர் கனமழையால், நிலச்சரிவு...சேறும் சகதியுமாக சாலைகள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி...

ஓசூர், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டியுடன் கூடிய கனமழை..கொத்தமல்லி, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் வேதனை...

சென்னை ஆவடியில் 14ஆவது மாடியில் இருந்து குதித்து 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை...குடும்ப பிரச்சனை காரணமாக விபரீத முடிவு...

மாநில எல்லையோர, கடலோர பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்...


Next Story

மேலும் செய்திகள்