வீடு, நிலம் வாங்குவோர் கவனத்திற்கு..பல மடங்கு எகிறுகிறது முத்திரைத்தாள் கட்டணம்.. - தமிழக அரசு திடீர் அறிவிப்பு..!

x

முத்திரைத்தாள் நடைமுறைகளை மாற்றி அமைப்பது தொடர்பான மசோதா, சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.2001 ஆம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை என்றும், இதனால் நீதி துறை அல்லாத அச்சிடப்பட்ட முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக செலவு அதிகரித்து இருப்பதால் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள முத்திரைத்தாள் கட்டண சட்டத்திருத்த மசோதாவில் பல்வேறு முத்திரைத்தாள் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.இதே போல, நிறுவனங்களுக்கான சங்க விதிகளுக்கான முத்திரைதாள் கட்டணம் ஐந்து லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான முத்திரைத்தாள் கட்டணம் 500 ரூபாயும். நிறுவனங்களுக்கான ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகின்றன.இந்த மசோதாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார்இந்த மசோதா வெள்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அன்றைய தினம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்