"கோயில் திருவிழா அப்பவா இப்படி நடக்கணும்'' - விரக்தியில் மக்கள்

x

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மின்சாரம்

இன்றி இருளில் தவித்து வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வந்தவாசி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் சாய்ந்து மின் கம்பங்கள் விழுந்தன. இதனால்

வந்தவாசியை அடுத்த கீழ்சீசமங்கலம், குறிப்பேடு, சாலவேடு கருடாபுரம் பகுதியில் மின்விநியோகம் தடைபட்டு

கிராமங்கள் இருளில் முழ்கின. கோயில் திருவிழா

நடைபெற்று வரும் நிலையில் வீடுகளில் மின்சாரம்

இன்றி பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளதாக கிராம

மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மின்துறையினர்

விரைந்து செயல்பட்டு மின்சாரம் வழங்க வேண்டும்

என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்