சண்முகார்ச்சனை கட்டணம் ரூ.5,000-ஆக உயர்வு - திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் அறிவிப்பு
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகார்ச்சனை கட்டணம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- இந்தக் கோவிலில் சண்முகார்ச்சனை நடத்துவதற்கு கடந்த 1995-ஆம் ஆண்டு முதல், ஆயிரத்து 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
- தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப 5 ஆயிரம் ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டு, தூத்துக்குடி மண்டல இணை ஆணையரிடம் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
- இந்த கட்டண உயர்வு, திங்கள்கிழமை முதல் அமலுக்கு வர இருப்பதாக கோவில் இணை ஆணையர் கார்த்திக் அறிவித்துள்ளார்.
Next Story