திருச்செந்தூர் மாசித் திருவிழா... பறவை காவடி எடுத்து நேர்த்தி கடன் - மிரண்டு பார்த்து பக்தர்கள்
- மாசித் திருவிழாவின் 2வது நாளை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- குமரியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வில்லு பாடல்களைப் பாடியும், பாதயாத்திரையாகவும், அலகு குத்தி பால்குடம் மற்றும் பல வகை காவடி எடுத்து வந்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்...
- நாழிக்கிணறு வள்ளி குகை கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- கடைகள் நிரம்பி வழிந்தன. திருச்செந்தூரில் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருளான கருப்பட்டியை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்...
- அதிகளவில் பக்தர்கள் கூட்டம் இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
Next Story