தற்கொலை நாடமாடிய டிக்டாக் பிரபலம்... கைது செய்து காப்பு கட்டிய காவல்துறை - கண்டித்த காவலர்களுக்கு தரக்குறைவு பேச்சு
திருச்சி - மணப்பாறை
ரொம்ப நாளா நம்மோட குற்றசரித்திரம் நிகழ்ச்சிக்குள்ள வராம இருந்த ஒரு விஐபி இன்னைக்கு ரீஎன்ட்ரி கொடுத்து இருக்காங்க…
யார் அவங்க ? என்ன தப்பு பண்ணாங்கன்னு நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க.
இப்ப இருக்கிற லோகேஷ் சினிமாடீக் யூனிவர்ஸ், மாதிரியே அது ஒரு கலர்ஃபுல்லான யுனிவர்ஸ்…
பணமோசடி, பாலியல் தொழில், பாலியல் பலாத்காரம், ஆட்கடத்தல்னு எத்தனையோ குற்றசம்பவங்கள் நடந்திருந்தாலும், அதுல போலீஸையே ஆட்டம் காண வெச்ச ஒரு நபர்னா அது, இவர்ரா தான் இருக்கும்.
சூர்யாதேவி….
பேர கேட்டாலே சும்மா அதிருதுல்லன்னு சொல்ற அளவுக்கு அம்மணி பண்ண thuglife சம்பவங்கள் எக்கச்சக்கமா கொட்டி கிடக்கு..
அரசியல் பிரமுகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரைக்கும் இவர் உரசி பார்க்காதா ஆளே இல்ல…
வரலாற்ற கொஞ்சம் திரும்பி பார்த்தோம்னா அவர் முதன்முதல்ல சீண்டி பார்த்து சிறைக்கு சென்றது, அப்போ பாஜகவோடு மாநில தலைவர்ரா இருந்த தமிழிசை செளந்தர்ராஜனை தான்.
இதை தொடர்ந்து வனிதாகூட சண்டை, நாஞ்சில் விஜயன் கூட பஞ்சாயத்து, சிக்கந்தர் மேல செருப்படின்னு ஊர் ஊர்ரா ஒரண்ட இழுத்து கேஸ்வாங்கின சூர்யாதேவி, ஒரு கட்டத்துல தற்கொலை பண்ணிக்கபோறத வீடியோ வெளியீட்டுட்டு, வீட்டில குரட்டைவிட்டு தூங்குனது தான் அல்டிமேட் thuglife சம்பவம்.
சம்பவத்தை தொடர்ந்து ரொம்ப நாளா நம்முடைய குற்றசரித்திரம் வளையத்துக்குள்ள சிக்காமா இருந்த சூர்யாதேவி இன்னைக்கு ரீஎன்ட்ரி கொடுத்திருகிறது காரணம் மறுபடியும் அவர் கையில் எடுத்த தற்கொலை முயற்சி தான்.
மணப்பாறை காவல்நிலையத்துக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கேண்னோட வந்த சூர்யாதேவி திடீர்னு தற்கொலைக்கு முயன்று இருக்காங்க.
டூட்டியிலிருந்த காவலர்கள் உடனடியா சூர்யாதேவி மேல தண்ணீய ஊத்தி அவரை காப்பாத்தி இருக்காங்க.
பாலோவர்ஸ் எல்லாரும் Thuglife தலைவிக்கு என்னாச்சோ, ஏதோச்சோன்னு அக்கறையா விசாரிச்ச அதே நேரத்துல தான் சூர்யாதேவி அதிரடி கைது என்ற செய்தியும் வெளியாச்சி.
என்ன நடந்துச்சின்னு தெரிஞ்சிக்க நம்முடைய குற்றசரித்திர குழுவும் விசாரணையில இறங்கியது.
சென்ற 21-ம் தேதி கணவர் மருதுபாண்டியும், அவரோட சகோதரரும் சேர்ந்து தன்னை கொலை முயற்சி பண்றதா சொல்லி சூர்யாதேவி மணப்பாறை காவல்நிலையத்துல புகார் கொடுத்து இருக்காங்க. அதே மாதிரி சூர்யாதேவி மேலயும் எதிர்தரப்புல இருந்து புகார் அளிக்கப்பட்டு இருக்கு.
இது தொடர்பா போலீஸ் அதிதீவிரமா விசாரிச்சப்போ வழக்கு சூர்யாதேவி மேலயே திரும்பி இருக்கு, இந்த சூழல்ல தான் சூர்யாதேவி அந்த தரம்மான தற்கொலை முயற்சி நாடகத்தை போட்டு இருக்கிறதா சொல்லப்படுது. அதுமட்டுமில்லாம விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காம தொடர்ந்து காவலர்கள தரக்குறைவா பேசி மன உளைச்சல் ஏற்படுத்துன குற்றத்திற்காக சூர்யாதேவிய கைது பண்ணி இருக்காங்க. அந்த கைது நடவடிக்கை மீண்டுமொரு தற்கொலை முயற்சி நாடகத்துக்கான ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கைன்னும் நெட்டிஷன்கள் இப்படிச்ச் கலாய்ச்சிட்டு இருக்காங்க.