'தங்கத்தை பாலீஷ் போடுபவர்களே..' 'உஷார்... உஷார்...!' தங்க நகையை பாலீஷ் போடுவதாக கூறி மோசடி.
ராணிப்பேட்டை அருகே தங்கை நகையை பாலீஷ் போட்டு தருவதாக கூறி நகையை உருக்கி மோசடி செய்த வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவியிடம் நகைகளை பாலீஷ் போட்டு தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய அவரும் 3 சவரன் தங்க சங்கிலியை கொடுக்கவே அதை ஆசிட்டில் போட்ட அவர்கள் 4 கிராம் நகையை உருக்கி மோசடி செய்தனர். இதையறிந்த அந்த பெண் அக்கம்பக்கத்தினர் உதவியோடு வடமாநில இளைஞர்கள் 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இதன்பேரில் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story