ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவி

திருச்செந்தூர் அருகே பெண் ஊராட்சி மன்ற தலைவர், ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x

தூத்துக்குடி புன்னைக் காயல் மீனவ கிராமத்தில் உலக மீனவர் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்ட நிலையில், நிகழ்ச்சிக்கு அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் மற்றும் அக்கிராம ஊராட்சி மன்ற தலைவர் சோபியா ஆகியோர் முறைப்படி அழைக்கப்படவில்லை எனவும், இதனால் சோபியா தனக்கு, ஆதரவான மீனவர்களுடன் சென்று கொடியேற்றினார் எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சோபியாவையும், அவருக்கு ஆதரவான மீனவர்களையும் ஊரை விட்டு விலக்கி வைப்பதாக ஊர் நலக் கமிட்டி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்கும் சோபியா ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கோட்டாட்சியரும், வட்டாட்சியரும் நேரில் சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்