நள்ளிரவில் SBI ஏடிஎம்-ஐ உடைத்த கும்பல்.. கும்மிடிப்பூண்டியில் தொற்றிய பதற்றம்

x
  • கும்மிடிப்பூண்டியில் நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற மர்ம கும்பலை போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தேடிவருகின்றனர்.
  • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு சென்ற மர்ம நபர்கள்
  • பணத்தை திருட முயற்சித்து உள்ளனர். அப்போது அலாரம் ஒலித்ததால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
  • இது குறித்த புகாரின் பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த 14 லட்சம் ரூபாய் தப்பியது.
  • இது குறித்து விசாரணை நடத்த 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
  • சம்பவம் நடப்பதற்கு முன்னதாக ஏ.டி.எம். மையத்தையொட்டி பெட்டிக்கடை நடத்தி வரும் பிண்டு சிங் என்பவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து செல் போன் மற்றும் 4 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒரே 3 பேர் பறித்து சென்றுள்ளனர்.
  • இதனையடுத்து மேற்கண்ட 2 சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்