"தமிழ்நாட்டிற்கு பெண் பிள்ளைகளை நம்பி அனுப்புவார்கள்" - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

x

தமிழ்நாடு பாதுகாப்பானது என்பதால் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை நம்பி அனுப்புவார்கள் என, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில், தேசிய ஒருமைப்பாட்டு முகாம் தொடக்க விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர், வடகிழக்கு மாநிலத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு தமிழகத்திற்கு வரும்போது மகிழ்ச்சி அடைவார்கள் என குறிப்பிட்டார். இங்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதால், குறிப்பாக பெண் பிள்ளைகளை நம்பி அனுப்புவார்கள் என்றும் தெரிவித்தார். தமிழக மக்கள் நட்பாக பழகி உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மாணவர்கள் ஒருங்கிணைந்து சமூக வலைதளம் மூலம் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு பயனடையுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்