2 பிரேத பரிசோதனை அறிக்கையிலும் பல மாறுதல்கள் இருப்பதாக ஸ்ரீமதி தரப்பு குற்றச்சாட்டு
2 பிரேத பரிசோதனை அறிக்கையிலும் பல மாறுதல்கள் இருப்பதாக ஸ்ரீமதி தரப்பு குற்றச்சாட்டு
ஸ்ரீமதி மரணம் தொடர்பாக மருத்துவக்குழு நடத்திய 2வது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது...
கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் 14ஆம் தேதி ஸ்ரீமதிக்கு நடந்த முதல் பிரேத பரிசோதனை அறிக்கையானது அதே மாதம் 16ஆம் தேதி வெளியானது. இதனிடையே மறு பிரேத பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கடந்த மாதம் 19ஆம் தேதி மறு பிரேத பரிசோதனை மருத்துவக் குழுவால் நடந்தது. இந்த அறிக்கையானது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சூழலில் அது தற்போது வெளியாகி உள்ளது. முதல் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும், 2வது பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் பல மாறுதல்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில் அதை உறுதி செய்யும் விதமாக பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. நுரையீரலின் மேல் மற்றும் கீழ் பகுதியில் சிதைவு, வலது பக்க கல்லீரலில் சிதைவு, தலையின் பின்பக்கத்தில் காயங்கள் ஏற்பட்டு சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மாணவியின் உடல் உள்ளுறுப்புகள் ரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கும் நிலையில் அதன் முடிவுகள் வெளிவந்த பிறகே இந்த வழக்கில் அத்தனை உண்மைகளும் தெரியவரும் என கூறப்படுகிறது.