அடுத்தவர் மனைவியை... பெண் கேட்டு போன இளைஞர்... ஏஜெண்ட் Tina-வாக மாறி... தலையில் வெட்டிய பெண்ணின் தாய் - கோவையில் அதிர்ச்சி

x

கோவையில் திருமணமான பெண்ணை, பெண் கேட்டு சென்ற இளைஞருக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

திருமணத்தை தாண்டிய தகாத உறவால், புகுந்த வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார் 30 வயது பெண்...

மகளின் இந்த நிலையை நினைத்து வருந்தி கொண்டிருந்த தாய், இது அனைத்திற்கும் காரணமான மகளின் தகாத உறவு காதலன், தனது மகளை பெண் கேட்டு வீட்டிற்கே வந்த போது, விக்ரம் திரைப்பட ஏஜென்ட் டினாவாக மாறி அவரை பொளந்து கட்டியிருக்கிறார்....

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த வீரக்குமார் என்பவர், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு மேடை அலங்காரம் செய்து கொடுக்கும் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு, காதணி விழா ஒன்றிற்கு மேடை அலங்காரம் செய்து கொடுக்க சென்றுள்ளார்...

அப்போது, அந்த விழாவை முன்னின்று நடத்திய திருமணமான 30 வயது பெண்ணுடன் வீரக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது... இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்த நிலையில், இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டு தகாத உறவாக மாறியதாக கூறப்படுகிறது.

இதில், திருமணமான அந்த பெண்ணுக்கு 11 வயதில் மகள் ஒன்று உள்ள நிலையில், பெண்ணின் தகாத உறவு அவரின் கணவருக்கு தெரியவர, அவர் மனைவியை கண்டித்துள்ளார்...

இதனால், அப்பெண், வீரக்குமாருடன் பேசுவதை நிறுத்திய நிலையில், வீரக்குமாருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது...

திருமணத்துக்கு பிறகு, மீண்டும் அந்த 30 வயது திருமணமான பெண்ணை தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்த வீரக்குமார், தனது வலையில் அவரை மறுபடியும் விழ வைத்திருக்கிறார்...

இருவரும் தங்களின், கணவனுக்கும், மனைவிக்கும் தெரியாமல் உறவை வளர்த்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இந்த உறவு இருவரது வீட்டிற்கும் தெரியவந்துள்ளது...

இதனால், ஆத்திரமடைந்த வீரக்குமாரின் மனைவி, அவரின் தந்தை வீட்டுக்கு கோப்பித்துக்கொண்டு சென்ற நிலையில், திருமணமான அந்த 30 வயது பெண்ணும் தனது கணவனுடன் சண்டையிட்டு தாய் வீட்டில் தஞ்சமடைந்திருக்கிறார்...

இந்நிலையில், தனது தாய் மற்றும் தந்தையிடம், தன்னுடைய தகாத உறவை எடுத்துக்கூறிய அந்த 30 வயது பெண், தன்னை வீரக்குமாருக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியிருக்கிறார்...

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த இருவரும், மகளுக்கு புத்திமதி கூறி கணவருடன் சேர்ந்து வாழ வற்புறுத்தியிருக்கின்றனர்... இதனால் விரக்தி அடைந்த அவர், வீரக்குமாரை தொடர்பு கொண்டு, தனது பெற்றோரிடம் தன்னை பெண் கேட்குமாறு கூறி செல்போனில் அழைப்பு விடுத்திருக்கிறார்...

உடனே, தனது இரு நண்பர்களை அழைத்துக்கொண்டு, அந்த 30 வயது பெண்ணின் வீட்டிற்கு சென்ற வீரக்குமார், அவரின் பெற்றோரிடம் உங்கள் மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெண் கேட்டிருக்கிறார்...

அப்போது, அருவா மனையில் காய்கறி நறுக்கி கொண்டிருந்த அந்த பெண்ணின் தாய், விக்ரம் திரைப்பட ஏஜென்ட் டினாவாக மாறி ஆத்திரத்தில் அருவா மனையால் வீரக்குமாரின் தலையில் ஓங்கி வெட்டிய நிலையில், களம் கலவரமாக மாறி இரு தரப்பினரும் மாறி மாறி அடித்துக்கொண்டுள்ளனர்...

இதில், படுகாயமடைந்த வீரக்குமாரை அவருடன் வந்த நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது...

புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார், பெண்ணின் தந்தை சுப்ரமணியம் மற்றும் தாய் தங்கமணியை கைது செய்து சிறையிலடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்