புரியாத பாஷையில் பேசிய இளைஞர்... 'அடி' பாஷையில் புரியவைத்த கண்டக்டர் - பிரீ பஸ்க்குள் கேட்ட "அண்ணா அண்ணா" அலறல்

x

கர்நாடகாவில், பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என்ற விவரம் அறியாத வெளிமாநில இளைஞர், தானும் டிக்கெட் எடுக்கமாட்டேன் என நடத்துனருடன் கைகலப்பில் ஈடுபட்ட சுவாரஸ்ய சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...

பெண்களிடம் டிக்கெட் கேட்காமல், என்னிடம் மட்டும் டிக்கெட் கேட்கிறாயே என ஆத்திரப்பட்டு, பேருந்து நடத்துனரிடம் வெளிமாநில இளைஞர் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் தான் இது...

கர்நாடகாவில் சக்தி திட்டம் என்ற பெயரில், பேருந்தில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் அந்த மாநில அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

தலைநகர் பெங்களூருவிற்கு வந்த வெளிமாநில இளைஞர், ராமையா கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாநகர போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணம் செய்ய ஏறியுள்ளார்.

பேருந்தில் இருந்த நடத்துனரோ, பெண்களிடம் டிக்கெட் வாங்காமல், இளைஞரிடம் வந்து டிக்கெட் என கேட்டுள்ளார்.

அந்த இளைஞருக்கு ஒன்றுமே புரியவில்லை... ஏன் பெண்களை மட்டும் விட்டுவிட்டு, தன்னிடம் மட்டும் வந்து நடத்துனர் டிக்கெட் கேட்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை நடத்துனர் தன்னை ஏமாற்றி விடுவாரோ என்ற சந்தேகத்தில், டிக்கெட் வாங்க முடியாது என அவரது மொழியில் கூற, நடத்துனரோ, மீண்டும் டிக்கெட் என கேட்டுள்ளார்.

ஆனால், அந்த நபரோ பெண்களை கைநீட்டி பேச, அதனை புரிந்து கொண்ட நடத்துனரோ, அவரது மொழி புரியாமல், ஆங்கிலத்தில் லேடீஸ் ஒன்லி ப்ரீ டிக்கெட், ஜென்ட்ஸ் டிக்கெட் எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

எதற்கும் அசைந்து கொடுக்காத அந்த வெளிமாநில இளைஞர், மீண்டும் நடத்துனரிடம் தகராறில் ஈடுபடவே, சக பெண் பயணிகள் இளைஞரை சமாதானப்படுத்தி விவரத்தை கூறினர்.

ஆனாலும், புரியாத பாஷை என்பதால் அவர்கள் சொல்ல வருவது இளைஞருக்கு புரிந்தபாடில்லை.

மீண்டும் நடத்துனர் டிக்கெட் கேட்கவே, ஒரு கட்டத்தில் டிக்கெட் எடுக்க முடியாது எனக்கூறி, நடத்துனரை தாக்க முயன்றுள்ளார் அந்த இளைஞர். அப்போது ஆத்திரமடைந்த நடத்துனரும், தன் பங்கிற்கு தாக்குதல் நடத்த, இளைஞரும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்த, பேருந்துக்குள் போர்க்களமே உருவானது.

ஆத்திரமடைந்த நடத்துனர், பேருந்தை காவல்நிலையத்தில் விடுமாறு ஓட்டுநரிடம் கூற, விவரம் தெரியாமல் சண்டையிடும் இளைஞரை, சக பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறக்கி, விவரத்தை புரியும்படி கூறினர்...

அதன் பின்னரே, பெண்களுக்கு மட்டும் பேருந்தில் இலவச பயணம் என இளைஞருக்கு புரியவர, ஓ... இதுதான்... "ஆ"...வா.... என விவேக் பட காமெடி போல் ஆனது பேருந்து பயணம்...


Next Story

மேலும் செய்திகள்