திடீரென அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள் - பிளேடால் கையை அறுத்துக்கொண்டதால் பதற்றம்

x

வாலாஜாபேட்டை அருகே, பட்டா கேட்டு அமைச்சர் காந்தியை முற்றுகையிட்ட இருளர் பெண்கள், பிளேடால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றனர். வன்னிவேடு பகுதியில், வேளாண்துறை சார்பில் கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர் காந்தி பங்கேற்றார். அப்போது, அமைச்சரை முற்றுகையிட்ட இருளர் இன பெண்கள், பட்டா வழங்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கால்நடைத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் பட்டா வழங்குவதில் சிக்கல் இருப்பதாகவும், வேறு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்த பெண்கள், பிளேடால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்