அடிக்கடி போனில் பேசிய மனைவி கொலை... போலீசுக்கு பயந்து போட்ட சாமியார் கெட்டப்- பக்கா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

x

மனைவியை கொலை செய்து விட்டு, சாமியார் போல் வேடமணிந்து தலைமறைவாக இருந்த கணவரை ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு போலீசார் கைது செய்தனர்.

சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர், தனது மனைவி வாணி அடிக்கடி செல்போனில் பேசியதால் சந்தேகம் அடைந்து கடந்த 2021-ஆம் ஆண்டு கொலை செய்து விட்டு தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக, ஓட்டேரி காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து ரமேஷை தேடி வந்தனர். அவரைப் பற்றி எந்த துப்பும் கிடைக்காத நிலையில், ரமேஷ் தனது மகனின் நண்பருக்கு ஜிபே மூலமாக பணம் அனுப்பியதை போலீசார் கண்டுபிடித்தனர். அதில், பிச்சை எடுத்து சம்பாதித்த பணத்தை அனுப்பி உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, திருப்பதி, திருத்தணி, திருவண்ணாமலை என புகழ்பெற்ற கோயில்களில் போலீசார் தேடி வந்தனர். பின்னர் ரமேஷின் நண்பரை பிடித்து விசாரித்தபோது, ரமேஷ் சாமியாராக மாறி, டெல்லியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கி இருப்பதாக கூறினார், இதையடுத்து டெல்லி விரைந்த போலீசார், ஆசிரமத்தில் தங்கி இருந்த ரமேஷை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்