இறப்பிலும் இணைபிரியாத காதல்...திடீரென உயிரைவிட்ட மனைவி அவரின் உடல் மீது சாய்ந்து உயிரைவிட்ட கணவர்
மனைவி இறந்த சோகம் தாங்காமல் கணவரும் உயிரிழந்த சோக சம்பவம் மயிலாடுதுறையில் நிகழ்ந்துள்ளது. சோழம்பேட்டை கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் 81 வயதான விஜயலட்சுமி. இவரது கணவரான 84 வயது சீனிவாசன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்... நேற்று காலை விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், மனைவி இறந்த துக்கம் தாளாமல் இருந்த சீனிவாசன் திடீரென அவரது உடலில் சாய்ந்து உயிரிழந்தார்... இறப்பிலும் இணைபிரியாத இத்தம்பதியின் அன்பு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Next Story