தமிழகத்தை உலுக்கிய VAO கொலை.. "கொலைக்கு முன்பே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சென்ற கொலையாளி" -பகீர் தகவல்
காவல் உதவி ஆய்வாளர்கள் கையூட்டு பெற்றுக்கொண்டு மணல் கடத்தலை ஊக்குவித்ததாலயே கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொலை செய்யப்பட்டார் என தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தல் விவகாரம் தொடர்பாக அரங்கேறிய இந்த கொலை சம்பவம் குறித்து, தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். புகாரில், ராமசுப்பிரமணியன் காவல்நிலையம் வந்து சென்ற அன்றே லூர்து பிரான்சிஸ் வெட்டி கொல்லப்பட்டுள்ளார் என்றும், காவல்நிலையமும், விஏஓ அலுவலகமும் அருகருகே உள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
முறப்பநாடு முன்னாள் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் தற்போதைய உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் ஆகிய இருவரும் கையூட்டு பெற்றுக்கொண்டு மணல் கடத்தலை ஊக்குவித்ததாலயே கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொலை செய்யப்பட்டார் என தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்