13 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கோயில்... கருவரையில் இருந்த பூட்டை உடைத்து சிறப்பு பூஜை
மதுரை திருமங்கலம் அருகே 13 ஆண்டுகளுகளாக பூட்டிக்கிடந்த கோயிலில், காவல்துறை பாதுகாப்புடன் பூட்டை உடைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. மேல நேசநேரி பகுதியில் இரு சமூகத்திற்கியே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்காள ஈஸ்வரி வால குருநாதன் கோயில் 13 ஆண்டுகளுக்கு முன்பு பூட்டப்பட்டது. இதனால், 13 ஆண்டுகளாக கோயிலுக்கு வெளியே கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுபடி, போலீசார் குவிக்கப்பட்டு கோயிலில் உள்ள பூட்டுகளை அறநிலையத்துறையினர் உடைத்தனர். பின்னர், கோயிலுக்குள் கருவரையில் இருந்த பூட்டையும் உடைத்து, கோயிலில் பூஜை நடத்தப்பட்டது. இதையடுத்து, சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story