செங்கோல் நிறுவும்போது ஒலித்த 'தமிழ்' குரல்.. பிரதமரே புல்லரித்து நின்ற 'அந்த' தருணம்

x

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த கல்லூரி மாணவி உமா நந்தினி திருமுறை பாடல்களால், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் அரசு விருந்தினராக அலங்கரித்து வந்துள்ளார்... இது பற்றிய ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பைக் காணலாம் "தமிழ் வேதம்" என்று போற்றப்படும் பன்னிரு திருமுறைகள் பிறப்பும் இறப்புமற்ற பரம்பொருளான சிவபெருமானைப் போற்றிப் பாடும் நூல்கள்...தெய்வீக நூலான இப்பன்னிரு திருமுறைகளின் 18 ஆயிரம் பாடல்களை 239 நாட்களுக்குள் பண்ணோடு பாடி அசத்தி, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற பெருமை வாய்ந்தவர் தான் உமா நந்தினி...

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த உமா நந்தினி கல்லூரி 2ம் ஆண்டு தமிழ் இலக்கிய மாணவி... சிறுவயதில் இருந்தே பக்தி இலக்கியங்கள் மீது உமா நந்தினிக்கு தீராக்காதல்...கொரோனா காலகட்டத்தில் பலரும் நேரத்தை வெட்டியாக செலவழிக்க, உமா நந்தினியோ பன்னிரு திருமுறை பாடல்களைப் பாடி தேசிய சாதனை படைத்தார்... இதன் மூலம் இவருக்கு திருவாவடுதுறை ஆதீனத்தின் அறிமுகமும் கிடைத்தது... காலையில் கல்லூரி... படிப்பு முடிந்ததும் மீதி நேரத்தில் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் திருமுறை பாடல்கள் பாடி பிறருக்கும் பயிற்றுவித்து வந்தார் உமா நந்தினி...

இந்த சூழலில் தான் புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் அரசு விருந்தினராய்ப் பங்கேற்க உமா நந்தினிக்கு அழைப்பு வந்துள்ளது... இவ்வளவு சிறிய வயதில் எவ்வளவு பெரிய பெருமை இந்த இளம்பெண்ணுக்கு... நாடே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில், செங்கோல் நிறுவும் நிகழ்வின் போது, 5 பெரும் ஓதுவார்களுடன், இளம் ஓதுவாரான உமா நந்தினியும் திருமுறை பாடி அனைவரையும் புல்லரிக்கச் செய்தார்... "பாராளுமன்ற திறப்பு விழா-அடியேனுக்கும் அழைப்பு வந்தது" "6 ஓதுவார்கள் சென்றோம்-அடியேனுக்கும் வாய்ப்பு கிடைத்தது பாக்கியம்" இவை எல்லாம் திருமுறைகளால் கிடைத்தது" குறிப்பாக 2 நாட்கள் இதர ஓதுவார்களுடன் உமா நந்தினியும் பிரதமர் மோடியுடன் விழாவில் பங்கேற்ற நிலையில், அவர் குறித்த சுவையான தகவலை நம்முடன் உமா நந்தினி பகிர்ந்து கொண்டார்...

"பிரதமர் மோடியோடு 2 நாட்கள் கழிக்க வாய்ப்பு"

"இந்த வாய்ப்பு திருமுறைகளால் தான் கிடைத்தது"

"வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி"

பயிலும் காலத்திலேயே பக்தி இலக்கியங்களால் பாராளுமன்றத்திற்கே அரசு விருந்தினராய் அழைக்கப்பட்டு, அங்கு திருமுறை பாடி திருமுறைக்கும் தமிழகத்திற்கும் பிறந்த மண்ணிற்கும் பெருமை சேர்த்த ஒரு சாதாரண கல்லூரி மாணவியின் இந்த சாதனை பயணமானது இன்றைய தலைமுறைக்கு மிகச்சிறந்த முன்னுதாரணம்...


Next Story

மேலும் செய்திகள்