காமன்வெல்த் போட்டியில் 4 தங்கம் - தட்டி தூக்கிய தமிழக வீரர் - ஆள் உயர மாலையோடு உற்சாக வரவேற்பு

x

காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று, நாடு திரும்பிய தமிழக வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டிகளில், 120 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்பயிற்சி கழக வீரர் சிவலிங்க ரவி, முதலிடம் பிடித்து 4 தங்கப் பதக்கங்களை தட்டித் தூக்கினார்.

இதனிடையே, நாடு திரும்பிய அவருக்கு, சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா தலைமையில் ஆள் உயர மாலை அணிவித்து, செண்டை மேளம் முழங்க, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்