ஆயில்யம் நட்சத்திரகாரர்கள் வணங்க வேண்டிய திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயிலின் சிறப்பு

x

திறமையான பேச்சாற்றலும், சமயோஜித புத்தி உள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரகாரர்கள்...

இராமபிரானின் அன்புக்கும், மரியாதைக்கும் உகந்தவரான சகோதரன் லட்சுமணன் பிறந்த நட்சத்திரம் ஆயில்யம்..

ஆயில்யம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக இருப்பவர் புதன்...

முன்பொரு காலத்தில் தவத்தில் இருந்த துர்வாச முனிவருக்கு தொல்லை கொடுத்ததால் கந்தர்வன் நண்டாக பிறக்கு சாபம் பெற்றான்...

சிவபெருமானை நினைத்து தாமரை பூக்களை கொண்டு அபிஷேகம் செய்ததால் சாபம் நீங்க பெற்றான்... இதனால் சிவபெருமான் கற்கடேஸ்வரராக அழைக்கப்பட்டார்...

அதேபோல தீராத பக்க வாத நோயால் பாதிக்கப்பட்ட சோழ மகாராஜனுக்கு மருத்துவரின் உருவில் வந்த ஈசனும் அம்மையும் அவருக்கு மருந்தளித்தனர்...

தண்ணீரில் விபூதி கலந்து குடிக்க சொல்லி, கழுத்தில் ருத்ராட்ச மாலையை கட்டிவிட்டு சென்ற பின்பு அதிகாலையில் எழுந்த மன்னனின் உடல் பூரண குணமானது...

ஈசனின் மகிமையை உணர்ந்த மன்னன் கோயிலை அமைத்து ஈசனை அருமருந்துடையார் எனும் நாமத்திலும், தாயாரை அருமருந்து நாயகியாகவும் வழிபட்டதாக கூறுகிறது வரலாறு...

இங்கு மூலவராக கற்கடேஸ்வரரும், தாயார் அருமருந்து நாயகியாகவும் மற்றொரு சன்னதியில் அபூர்வ நாயகியாகவும் அருள்பாலிக்கின்றனர்...

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்குள்ள ஈசனுக்கும், அம்பாளுக்கும் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அந்த எண்ணெயை உண்டு வர நோய்கள் அண்டாத ஆரோக்கிய வாழ்வினை பெறுவர்...

மகாசிவராத்திரி, பிரதோஷ நாட்களில் மூலவருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட எடுத்த காரியம் நிவர்த்தியாகும்...

அமாவாசை நாட்களில் இறைவனை தொழுது விட்டு கடலில் சிறிது பால் ஊற்றி பின் வாயில்லா ஜீவன்களுக்கு பால் அருந்த கொடுப்பதால் தீவினைகள் அண்டாமல் இருக்குமாம்...

ஆயில்யம் என்றால் பாம்பினை குறிக்கும் சொல் எனவே முடிந்த அளவு பாம்பினை தாக்காமல், நாக ராஜனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட துஷ்ட சக்திகளிடமிருந்து காக்க வல்லதாக அமையும்...

புதன் கிழமைகளில் ஆதிசேஷ விஷ்ணு பகவான் கோயிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபடுவது அனுகூலத்தை தரும்...

கோயிலானது காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையும் திறந்திருக்கும்...

தஞ்சையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவும், மயிலாடுதுறையில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவும், கும்பகோணத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவும் பயணித்தால் கோயிலை வந்தடையலாம்...

ஆயில்யம் நட்சத்திரகாரர்கள் வணங்க வேண்டிய திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயிலின் சிறப்புகளைமகம் நட்சத்திரகாரர்கள் வணங்க வேண்டிய கோயிலையும், அதன் சிறப்புகளையும் நாளைய தினம் ஒரு தரிசனம் பகுதியில் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்