குட்கா சோதனைக்கு சென்ற சிறப்பு படை.. மளிகை கடையில் காத்திருந்த அதிர்ச்சி

x

பெரம்பலூர் அருகே மளிகை கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டெட்டனேட்டர் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கவுள்பாளையம் கிராமத்தில் மகேந்திரன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். குட்கா பொருட்கள் தொடர்பாக மகேந்திரனின் கடையில், சிறப்பு படையை சேர்ந்த காவலர்கள் திடீரென சோதனையிட்டனர். அப்போது, உரிய அனுமதியின்றி கல்குவாரிகளில் பயன்படுத்தப்படும் டெட்டனேட்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. விசாரணையில் மகேந்திரனின் மகன் கோபிநாத் வைத்திருந்தது தெரியவர அதனை பறிமுதல் செய்த போலீசார், கோபிநாத்தையும் சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்