சித்தப்பாவை சரமாரியாக சுட்டு துப்பாக்கியோடு ஸ்டேஷன் சென்ற மகன்
திருவண்ணாமலை அருகே சொத்து தகராறில் சித்தப்பாவை சுட்ட இளைஞர், துப்பாக்கியுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
போளூர் பலாக்கானூர் மேட்டு கொல்லை பகுதியை சேர்ந்த சகோதரர்கள் கோவிந்தன் மற்றும் துரைசாமி. இருவருக்குள்ளும் அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோவிந்தன் மகன் ஏழுமலை சித்தப்பா துரைசாமியை நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
உடனே அங்கிருந்து தப்பி ஓடிய ஏழுமலை, ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் நாட்டு துப்பாக்கியுடன் சரணடைந்தார்.
இதில் படுகாயமடைந்த துரைசாமி திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story