"பால் கொள்முதல் விலையை ரூ.10 ஆக உயர்த்த வேண்டும்" - விவசாயிகள் கோரிக்கை

மூன்று ரூபாயாக உயர்த்தப்பட்ட பால் கொள்முதல் விலை போதுமானதாக இல்லை என சேலம் மாவட்ட விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
x

கடந்த சில நாட்களுக்கு முன்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, பால்கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்த மூன்று ரூபாய் விலை உயர்வு கட்டுப்படியாகவில்லை என்ற விவசாயிகள், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் வரை உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்த விவசாயிகள், கால்நடை தீவனங்களின் விலை நூறு சதவீதம் உயர்ந்துள்ளதால், உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்