"வரும் 26 ஆம் தேதி போராட்டம் தேவையற்றது" - தொ.மு.ச கருத்து

x

மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வரும், 26 ஆம் தேதி அறிவித்திருக்கும் போராட்டம் தேவையற்றது என்று தொ.மு.ச. தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர் சந்தித்த தொ.மு.ச. செயலாளர் மணிமாறன்,கடும் நிதி நெருக்கடி நிலையிலும், மின்வாரிய ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை முதலமைச்சர் அறிவித்ததாக கூறினார். மின்வாரிய ஊழியர்களுக்கு தங்களால் தான் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது என்றும், எங்களால் தான் வெற்றி கிடைத்தது என்று கூறவே தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வரும் 26 ஆம் தேதி போராட்டம் அறிவித்து உள்ளார்கள் என்றும் அவர் கூறினார். எனவே இந்த போராட்டம் தேவையற்றது என்றும் மணிமாறன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்