"பூக்கள் விலை உயர்ந்தது.. ரொம்ப சந்தோஷமா இருக்கு" - மகிழ்ச்சியில் திளைக்கும் பூ வியாபாரி

x

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள புகழ்பெற்ற பூச்சந்தையில் ஓணம் பண்டிகைக்காக டன் கணக்கில் பூக்கள் குவிந்துள்ளன...

கேரள மக்கள் அதிகம் வந்து வாங்குவதால் சுமார் 250 டன் எடையுள்ள பூக்கள் குவிக்கப்பட்டுள்ளன.

2 ஆண்டுகளாக விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கேரள மக்கள் வெகு விமரிசையாக ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வரும் நிலையில், பூக்களின் தேவை அதிகரித்ததோடு விலையும் பன் மடங்கு உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏனெனில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 400 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை இன்று 3 ஆயிரத்து 200ஆகவும், பிச்சிப்பூ விலை 150ல் இருந்து ஆயிரத்து 400ஆகவும், செவ்வந்தி 80ல் இருந்து 450 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்