அடுத்த ஆட்டம் ஆரம்பம்... தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை

x

திருநெல்வேலி மாவட்டம், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக நெல்லை சந்திப்பு, டவுன், கொக்கிரகுளம், வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான களக்காடு, பத்மநேரி, கொண்டா நகரம் சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. கனமழையால் வாகன ஓட்டிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் சிரமம் அடைந்தனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதிகாலை முதல் பெய்ய தொடங்கிய மழை விட்டு விட்டு மிதமாக பெய்தது. இதனால், மக்கள் தங்கள் அன்றாட பணிகளை தொடர்வதில் சிரமம் ஏற்பட்டது.

பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்தது. குறிப்பாக ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் தங்கள் பணிகளை தொடர்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

பாபநாசத்தில் பெய்த கன மழையில், 4 மணி நேரத்தில் 101 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நெல்லை, தென்காசி உள்பட தென்மாவட்டங்களில் குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள காரையார் பகுதியில் 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. காரையார் அணைக்கு நீர்வரத்து காலை நிலவரப்படி சுமார் 2 ஆயிரம் கனஅடி காணப்பட்ட நிலையில், 11 மணி நிலவரப்படு 9 ஆயிரம் கனஅடி அதிகரிப்பால், நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்