அத்துமீறினால் ராணுவ பதிலடி' இதுதான் மோடியின் ஸ்டைல்..' அமெரிக்கா உளவுத்துறை ரிப்போர்ட் | Army Force

x

பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா, ராணுவ நடவடிக்கைகள் மூலம் பதில் அளிக்கவே வாய்ப்பு அதிகம் என அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது.

அமெரிக்க உளவுத்துறை ஆண்டுதோறும், அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான பிரச்சனைகள் கவலைக்குரியவை என கூறப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான ராணுவ குழுக்களை ஆதரிக்கும் நீண்ட வரலாறு பாகிஸ்தானுக்கு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கடந்த காலங்களை விட பிரதமர் மோடியின் தலைமையிலான இந்தியா, பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் நடவடிக்கை என கருதப்படும் செயல்பாடுகளுக்கு அல்லது உண்மையாகவே ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு, ராணுவம் மூலம் பதிலளிக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்