திடீரென ஊருக்கு வந்த கணவன்..செல்வ செழிப்புடன் மனைவி - பின்னணியில் கள்ளக்காதலன்...
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் சடலம் மிதந்த விவகாரத்தில், திருமணத்தை தாண்டிய தகாத உறவுக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஆசை பட பாணியில் மனைவியே கணவனை கொன்றது தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு தீபா என்பவருடன் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், கோயமுத்தூரில் தங்கி சக்திவேல் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், குழந்தைகளுடன் தனியே வசித்து வந்த தீபாவுக்கு, அதே பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. இந்நிலையில், திடீரென சொந்த ஊர் திரும்பிய சக்திவேல் , மனைவி செல்வ செழிப்புடன் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்துள்ளார். இது குறித்து கேட்டபோது, சுகுமார் கடன் கொடுத்து உதவியதாக கூறி அவரை அறிமுகப்படுத்தவே சக்திவேலும் அவருடன் பழகிவந்துள்ளார். இந்நிலையில், மனைவியின் நடத்தையின் மீதான சந்தேகம் வலுக்கவே ஒரு கட்டத்தில் இருவரின் தகாத உறவு தெரியவந்துள்ளது. இது குறித்து கேட்டு மனைவியிடம் சண்டையிட்ட சக்திவேலை, அவரது மனைவியும், சுகுமாரும் தீர்த்து கட்ட திட்டமிட்டுள்ளனர். இதன்படி, வீராணம் ஏரியில் சக்திவேலை மது அருந்த அழைத்த சுகுமார், அவரின் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி மூச்சிறைக்க கொன்று, சடலத்தை ஏரியில் வீசியது தெரியவந்தது. இந்நிலையில், உயிரிழந்த சக்திவேலின் மனைவி மற்றும் அவரின் தகாத உறவு காதலன் சுகுமாரை கைது செய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.