நீதிமன்றத்தில் மனைவியை பார்த்ததும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த கணவன் - திருச்சியில் அதிர்ச்சி
திருச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்த நபர், மனைவியை கண்டதும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த தியாகராஜன் என்பவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவரது மனைவி, ஜீவனாம்சம் கேட்டு திருச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்த தியாகராஜன், தனது மனைவியை கண்டதும் மயங்கி விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை சோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story