காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலி... "வழக்கை கேரள நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது" - பரபரப்பை கிளப்பிய காதலி குடும்பத்தினர்
தமிழக கேரள எல்லையான பாறசாலையில் ஷாரோன்ராஜ் என்ற கல்லூரி மாணவனை அவரின் காதலியே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் காதலியான கல்லூரி மாணவி க்ரீஷ்மா, அவரின் தாய் மற்றும் தாய் மாமா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், வழக்கின் அடிப்படை சம்பவம் நடந்ததாக கூறும் இடம் தமிழகம் என்பதால் வழக்கை கேரள நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என மூவரும் நெய்யாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, வழக்கின் விசாரணையை கேரளாவில் நடத்தலாம் என தெரிவித்திருந்த நிலையில், வழக்கு நாளை 10 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
Next Story