400 ரூபாய்க்கு சாப்பாடு வாங்கிவிட்டு கடையையே துவம்சம் செய்த கும்பல் - என்ன அநியாயம் .. பரபரப்பு காட்சி
சிவகங்கையில், பார்சல் உணவு வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் உணவகத்தின் உரிமையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள உணவகத்திற்கு வந்த சிலர், சுமார் 400 ரூபாய்க்கு உணவு பார்சல் வாங்கியுள்ளனர். பின்னர், உணவக உரிமையாளர் பணம் கேட்ட போது, அந்நபர்கள் அவரை கத்தியை காட்டி மிரட்டி சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அக்கும்பல் கடையில் இருந்த பொருள்களையும் சூறையாடியுள்ளனர். இச்சம்பவம், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story