வாகன சோதனையில் 2 தொழிலாளர்களை மடக்கி போலீசார் செய்த அதிருப்தி செயல் - கோவையில் அதிர்ச்சி | Kovai
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 கூலித் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தினர். பணம் எதுவும் தராமல் அவர்களை, டீ மற்றும் தண்ணீர் பாட்டிலை வாங்கித்தர போலீசார் கூறியதாக தெரிகிறது. இதனால் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று, டீ மற்றும் தண்ணீர் பாட்டிலை வாங்கித்தந்த பின்பே, தொழிலாளர்கள் செல்வதற்கு போலீசார் அனுமதித்துள்ளனர். போலீசாரின் இந்த செயல் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story