தாயை கொன்று சூட்கேஸில் அடைத்து ஸ்டேஷனுக்கு கொண்டு வந்த மகள்..கொன்றது எப்படி? கேட்டதும் பதறிய போலீஸ்

x

பெங்களூருவில், தாயைக் கொன்ற மகள், உடலை சூட்கேசில் அடைத்து வைத்து காவல்நிலையத்திற்கு கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு மைக்கோ லேஅவுட் காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் பெண் ஒருவர் சூட்கேசுடன் வந்தார். அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரித்தபோது, எதுவும் பேசாமல் சூட்கேஸை திறந்து காட்டியுள்ளார். அதில், 70 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பிலேகஹல்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் செலிமா சென் என்ற பெண், சூட்கேஸில் இருந்த சடலம் தனது தாய் என தெரிவித்தார். அத்தையுடன் அடிக்கடி தாய் சண்டையிட்டு, தற்கொலை செய்யப்போவதாக தன்னை தனது தாய் மிரட்டி வந்ததால், மனஉளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக செலிமா சென் தெரிவித்தார். மறுபடியும் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை வந்தபோது, மீண்டும் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதால், தாய்க்கு தூக்கமாத்திரை கொடுத்து கழுத்தை நெறுக்கி கொலை செய்ததாக அந்தப் பெண் கூறினார். உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், செலிமா சென்னை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்